வெள்ளி, 29 மார்ச், 2013

                               திருமூலரின் மரபியல் சிந்தனைகள் 


 திருமுலர் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை தமிழருக்கு முத்தான பொதுமறை .வேதாந்த சித்தாந்த வெளிவாசல் தாண்டி நாதாந்த வடிவான நாதனை காணும் ஞானம் நல்கிய தமிழ் .

     சிந்தைக்குள்ளை சிவனைக் காண சிந்தை செய்த,மானுடபிறவியின் மகத்துவத்தை பாடிய மாமனிதர் திருமுலர் .

     பாவச் சுமை மானிடப் பிறவி என்று பாடிய பக்தர் கூட் டத்தை விட்டு விலகி ,உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று பாடியவர் திருமுலர் .


                     '' ஒன்றே குலம் ஒருவனே தேவனும் ''

 என்று பாடிய ஆன்ம நேய அருட்கவி திருமுலர் .பச்சிலை போதும் பரமன் பூசைக்கு ,பசுவுக்கு ஒரு வாயுணவு , ஈ என வருவோர்க்கு ஒரு பிடி சோறு இதுவே உயர்ந்த தானம் என்றும் ' ஞானபோதம் ' நல்கிய ஞானி.


       திருமுலரை அருட் கவியாக ,ஞானியாகக் கொள்வதைக் காட்டிலும் அவரை அறிவியல் சிந்தனையாளர் என்பதனை அவருடைய பாடல் முலம் உணர முடிகிறது.திருமுலரை அருட்கவியாக ,ஞானியாக கொள்வதைவிட அறிவியல் சிந்தனையாளர் என்பதனை அவர் பாடல் மூலம் உணரமுடிகிறது .  அறிவியலை தன்னுடைய ஞான அறிவால் வென்ற மெய்ஞானி என்று கொள்வதே ஏற்க்கதக்கது .

         அறிவியலின் எல்லையில் தான் மெய்யறிவு துலங்கும் .மெய் உணர்தலை அறிவியலை நெறிப்படுத்த உதவும் .ஒரு சமுதாயம் உயர வேண்டும் என்றால் அறிவியலும் மெய் அறிவும் இணைந்து இருக்க வேண்டும் .

மரபியல் சிந்தனைகள் :
                                         
                                           மரபியல் அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள் பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையான  வேறுபாடுகள் குறித்து அறியும் அறிவியல் துறையாகும் .நெடுங்காலமாக தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபு பண்புகள் பற்றி விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது .அந்த அறிவே விவசாயத்தில் ,தாவரங்களிலும் கால்நடைகளிலும் தேர்வு இனபெருக்கம் மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது .


   

வியாழன், 28 மார்ச், 2013

kaamaiya suvamigal: அண்ட பெரு வெளியல் காலசக்கரம்        உலக உயிர்கள்...

kaamaiya suvamigal: அண்ட பெரு வெளியல் காலசக்கரம்

       உலக உயிர்கள்...
: அண்ட பெரு வெளியல் காலசக்கரம்         உலக உயிர்கள் உயர் நிலை அடைதல் வேண்டும் .உன்னதமான நிறை நிலையே எல்லோரும் பெறுதல் வேண்டும் என்ற குறிக்க...
அண்ட பெரு வெளியல் காலசக்கரம் 

       உலக உயிர்கள் உயர் நிலை அடைதல் வேண்டும் .உன்னதமான நிறை நிலையே எல்லோரும் பெறுதல் வேண்டும் என்ற குறிக்கோள் உறுதியானது .இக்கொள்கை வெற்றி பெற செய்வது காலத்தின் கரங்களில் உள்ளது .காலந்தோறும் வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி இந்த அண்ட பெரு வெளியல் ஒரு காலசக்கரத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது .ஒரு தாள காதியில் பாய்ந்து  கொண்டே இருக்கிறது .காலம் என்பதற்கு அறிவியல் தரும் இலக்கணம் அலைவீச்சு என்பது நம் காலத்திற்க்கான ஒரு அளவீடு.

    விஞ்ஞானிகள் இன்னும் நுணுக்கமாக அணுவுக்குள் அணுத்துகள்களின் அலை வீச்சு அளவை வைத்து  மிச்சிறு வினாடிகளாக கூறுவர் .இக்கட்டுரையில் விரிவாக ஆராய்வோம் .

காலம் :
                  நாம் தனி ஊசலின் அளவை வினாடி என்கிறோம் .அணுவியல் விஞ்ஞானிகள் அணுத்துகள்கள் அலை வீச்சு வினாடி என்று கூறுவார்கள் .அளவு தான் வித்தியாசம் தவிர இயக்கம் ஒன்று தான் .காலத்தை வினாடி ,மைக்ரோ செகன்ட் ,நேனோ செகன்ட் என்ற அளவீடுகளை வைத்து            கணிக் கிறோம் .

அலை வீச்சு :
                              அலை வீ ச்சு என்பதை குவண்டவியல் தத்துவத்தில் காணலாம்
ஒளியின் இயக்கத்தை  தான்குவண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள் .