புதன், 4 மே, 2011

veera berammam sri sathguru kaamaiya suvamigal jivasamaathi

    "அசைவது அசையாததுமான இந்த பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நிற்கின்றவரான இறைவனின் திருவடிகளைக்   காட்டித்   தந்த ஸ்ரீ குருவிற்கு வணக்கம் "
    சித்தர் என்பவர் சித்தத்தை வென்றவர் என்பர் ;சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள் வீட்டின்பம் அடைந்தவர் என பொருள் கொள்ளப்படுகிறது ;இந்த மானுடதேசம் மலர்ச்சிக் கொள்ளவும் ,வளம் பெருகவும் துயரம் நீங்கவும் ,மேல்நிலையாக கருதப்படும் பேரின்பத்தினை அடைதலை நோக்கமாக கொண்டு தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் தியாகம் செய்யும் தியாக செம்மலாக சித்தர் பெருமக்கள் காலம்தோறும் தோன்றி இந்த மானுடத்தினை செம்மை படுத்தினர் ஆறாவது அறிவு பெற்ற மனிதன் ஏழாவது அறிவை எட்டி பிடிக்க வழிகாட்டும் வள்ளல்கள் தான் சித்தர்கள்.

சத்குரு காமையா சுவாமிகள் வாழ்க்கை வரலாறு:

                  ஆதி சங்கரரின் அத்வைத கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு ஞானவழி வாழ்ந்துவந்தார்.சத்குரு காமையா சுவாமிகள் ஆந்திரபிரதேசம்சித்தூர் மாவட்டத்தில் நகரி தாலுக்காவில் புக்காக்காரம் என்ற ஊரில் 21 .08 .1948 தேசப்ப நாயுடு ,நாகம்மாள் என்ற தம்பதிக்கு மகனாகதோன்றினர்.சிறுவயதில் முதல் ஞான தேடல் இருந்தது இருபதாவது வயதில்
அந்ததேடல் தீவிரமாக வளர்ந்தது .அந்த தேடலில் மந்திர தந்திர வித்தைகள்சித்துக்கள் போன்றவைகள் கைவர பெற்றாலும் நிறை ஞானம்பெறுவதே நோக்கம்எனஉணர்த்து ஞான குருவை தேடி அலைந்தார் .
" குருவே சிவமெனக் கூறினான் நந்தி" என்ற திருமூலரின் வாக்கு படி தம் ஞான குருவினை நாடு முழுவதும் தேடி அலைந்தார் .

ஞானதேடல்:

                      இந்தியாவின் எல்லாபகுதிக்கும் சென்று எல்லா ஆலயங்களையும் சென்று தரிசனம் செய்தார்.வேலைக்கு மும்பை சென்றவர் அங்கும் தன்னுடைய ஆன்மத்தேடலை நிறுத்தவில்லை .கிருத்துவ கோட்பாடுகளையும்இஸ்லாம் மத கோட்பாடுகளையும் தீவிரமாக ஆராய்ந்து உணர்ந்தார் .எல்லா மத கருத்துகளும்தனிமனிதனை மேல் நிலைக்கு அழைத்துசெல்லும் ஞான தேடலை என்பதை உணர்ந்தார் .காமையாசுவாமிகளின் நிலையை உணர்ந்த பெற்றோர்கள் பிள்ளைக்குதிருமணம் செய்துவைத்தால்ஊருக்குஊர் செல்லமாட்டார் என கருதி திருமணம் செய்து வைத்தார்கள்.

 இல்லற வாழ்க்கை:
                             இல்லற வாழ்க்கையில் வந்த பின்புதான் ஞான தேடலின் தீவிரம் அதிதீவிரமாக வளர்ந்தது .ஒரு பக்கம் குடும்பம் ,குழந்தைகள் என்ற பந்தம் பலமாக பிணித்தலும்இன்னொரு   பக்கம் பற்று இல்லாதுவாழவேண்டும் என்ற உறுதி மனதில் தோன்ற ஆரம்பித்தது. பெரிய மத குருமார்களை சந்தித்து தனக்கு ஏற்படும்சந்தேகங்களை கேட்டுஉணர்ந்தார் .
                                               
ஞான குருவின் தேடல்: 
                                                               மத்தியஅரசின் தபால் துறையில் தலைமை தபால்கர்
பணியில் சேர்ந்தார் . ஆனால் ஞானதேடலின் தீவிரம் மிகஅதி தீவிரமாகவளர்ந்தது.ஞான குருவின் தேடல் ஒருவழியாக தன்சொந்த ஊரில் கிடைத்தார் .சத்குரு ருத்ரமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய ஞான குருவாகஏற்றுக்கொண்டர்.குருவிடம் ஞான தீட்சை பெற்று கொண்டார் .ஞான தேடலை அகமுகமாக பயணிக்க ஆரம்பித்தார் .எழாவது அறிவை ஏட்டிபிடிக்கும் தேவ முயற்சியில் இறங்கினர்.

தியானம்:
                            தியானம் தான்எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கும் என்று உணர்ந்தவர் அது தான்  ஞானத்தின் திறவு கோல்என்பதனையும் உணர்ந்து தெளிந்தார் .18 ஆண்டுகள் இலவசமாக தியான வகுப்புகள்நடத்தினர். உடல் ,உள்ளம் ,ஆன்மாஎன்ற மூன்றையும் வலிமை
சேர்க்க யோகா பயிற்சி கொடுத்தார் .

ஜீவ சமாதி:

"தான் உயிர் தான்அறபெற்றானை  ஏனைய 
மண் உயிர் எல்லாம் தொழும்" [268 திருக்குறள்]


    வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ,சத்குரு காமையாசுவாமிகள் தன்தவ வாழ்வில் ஜீவ சமாதி ஆகபோவதை முன்னமே உணர்ந்து தம் சீடர்களின் அன்பினை உணர்ந்து அந்த விடயத்தை சொல்லவில்லை .     தன்குரு ருத்ரமூர்த்தி சுவாமிகள் வழிகட்டுதலும் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சித்தரின் வழி படுதலும்  தன்னை தானே ஒடிக்கிகொண்டர் .௨௦௦௭ நவம்பர் மாதம் 6 தேதிதுவாதசி திதி ஜீவசமாதி அமர்ந்தார் .ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் நகரி தாலுக்காவில் புக்கா அகரஹர்ரம் என்ற அழகிய கிராமத்தில் ஜீவசமாதி வைக்கப்பட்டது .
ஜீவசமாதி வைத்தமறுநாள் முதல் தொடர்ந்து இடிஉடன் மழை எரி,குளம் ,கிணறு எல்லாம்நிரம்பியது .

  மண்டல பூசை:

                                 48 நாள் மண்டல பூசை  நடைபெற்றது .41  வது நாள் 16 .12 .2007 ஞாயிறு
சப்தமி திதி ல் ஜீவசமாதி திறக்கப்பட்டது .சத்குரு காமையா சுவாமிகள் உடல் எந்த மாற்றமும் இன்றிவைத்தது போல காட்சிஅளித்தது .பொதுமக்கள் ,பத்திரிக்கை நிருபர்கள் ,டிவி ஊடகங்கள் இந்தநிகழ்வை பதிவு செய்தன. ஜீவசமாதி முடிய நாளிருந்து மழை காணாத  அந்த கிராமம் தொடர்ந்து 7 நாள்கள் மழை பொழிந்தது .

தொகுப்புரை:
                                           சத்குரு காமையா சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு ,ஞானதேடல் ,ஜீவசமாதிஎன்ற பன்முக ஞானம்ஒவ்வொரு தனிமனிதனுக்குள்உறங்கும் தெய்விக ஆற்றலை தட்டி எழுப்பும் என்பது திண்ணம் .

                                               குருவே  சரணம் .