செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மகான்கள் கோணிப்பை சாமியார்

                                                                          கோணிப்பை சாமியார்




Temple images


                                      புராண காலத்தில் மட்டுமன்றி சமீபகாலத்திலும்கூட எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்.      அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோணிப்பை சாமியார். இடுப்பில் கிழிந்த கோணிப்பையை மட்டுமே இவர் அணிந்ததால் கோணிப்பை சாமியார் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே இவர் பெயராக நிலைத்து விட்டது. வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ளது வில்வநாதீஸ்வரர் திருத்தலம்.

                                 இது ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அவனது மனைவியின் தாய் வீடு, திருவலம் நகரம்தான். அரசனால் கட்டப்பட்ட அரனாலயம் அநேக ஆண்டுகள் கடந்த நிலையில் புதர் மண்டி கவனிப்பார் எவரும் இன்றிக் கிடந்தது. அந்த தருணத்தில்தான் சிவானந்தன் என்பவர் அங்கு வந்து சேர்ந்தார்.

                              1960-களில் வந்த அவர், ஆலயத்தின் அவல நிலை கண்டு வருந்தினார். மண்டிக்கிடந்த புதர்களை தன்னந்தனி ஆளாய் களையத் தொடங்கினார். முதலில் அதைப் பார்த்த திருவலம் நகரவாசிகள் யாரோ பித்துப் பிடித்தவர். வீட்டில் இருந்து விரட்டப்பட்டவர் என்றெல்லாம் அவரை ஏளனம் செய்தனர்.

                          பிற்காலத்தில் அவர் பெரிய யோகியாக விளங்கப் போகிறார் என்பது, பாவம் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த பக்தரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலைச் சீரமைப்பதில் மட்டுமே நேரத்தைச் செலவழித்தார். அதோடு, கோயிலுக்கு ஏழைகள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வயிராற கூழ் ஊற்றவும் ஏற்பாடு செய்தார்.
 
                        தாமே முயன்று கோயிலைச் சீரமைத்து அவரே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது ஊரே வியந்து நின்று பார்த்தது. அவர்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்தது. கோயிலின் உள்ளே உள்ள வில்வ மரத்தின் கீழ் அமர்வதுதான் அவரது வாடிக்கை. அதிகம் பேசாமல் மவுனமாகவே இருந்த அவர் ஏதாவது சொன்னால், அந்த வாக்கு அப்படியே பலித்தது.

                      செய்தி ஊர் முழுவதும் பரவ, அவரை தரிசிக்க பலதரப்பட்ட மனிதர்கள் குவிந்தனர். கை நீட்டிக் காசோ பணமோ வாங்க மாட்டார் அவர். அவர் அருகில் யாராவது காசை வீசிவிட்டுச் சென்றால், தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு சின்னக் குச்சியால் அந்தக் காசுகளை தள்ளிக் கொடுப்பார். அவர் ஆசியால் வாழ்வில் வளமும் நலமும் அடைந்தோர் பலர். எல்லாம் இருந்தபோதிலும் கோயில் திருப்பணியில்தான் அதிக ஆர்வம் காட்டிய கோணிப்பை சாமியாரின் தலைமையில் எட்டு முறை கும்பாபிஷேகம் கண்டது கோயில். இக்கோயிலுக்கென நால்வர், நாயன்மார்கள், தொகையடியார்கள் சிலைகளும், செப்புத் திருமேனிகளும் செய்து வைத்துள்ளார்.


                     அதோடு கந்தகோட்டம், திருத்தணி, பொள்ளாச்சி கோயில்களுக்கு மரத்தேரும், வெள்ளித் தேரும் அளித்திருக்கிறார். திருப்பதி கோயிலுக்கும்கூட உதவிகள் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இவர் அளித்த வில்வ விபூதி மகிமையால் பல நோய்கள் குணமாகியுள்ளது என்றும்; குழந்தை வரம் கிடைத்தது என்றும் பல பக்தர்கள் சொல்கிறார்கள்.

                             பக்திப் பணியோடு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டிருந்த இவர், தான் ஜீவ சமாதியடையும்போது என்ன செய்ய வேண்டும், அதன்பின் அமையப் போகும் அதிஷ்டானம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டிவைத்தார்.

                         பின்னர், 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று திருவலம் கோயிலின் நுழைவாயிலுக்கு இடது புறத்தில் ஜீவ சமாதியாகிவிட்டார். கோணிப்பை சாமியார் எங்கள் ஊருக்கு வந்த பின்னர்தான் பல நன்மைகள் நடந்தது.

                          அதனால் அவரை மகானாகவும் தெய்வமாகவும் போற்றுகிறோம். இன்றும் எங்கள் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்கிறார்கள். வேலூர் மாவட்டம் திருவலத்தில் கோணிப்பை சாமியாரின் ஜீவசமாதி உள்ளது.

Maha Ananda Siddha


                                       Maha Ananda Siddha





        Sri La Sri Maha Ananda Siddha Transmission Drawing 
             You Are The World
              I Am In All Events
              I Am What Is Not There


                Maha Ananda Siddha: maha = huge, ananda = bliss. Maha Ananda Siddha is the 19th Siddha in the lineage of famous Maha Siddhas of South India; as Agastyar, Bogharnath and Thirumoolar. This current Siddha, Maha Ananda has gone without food or water for since 2003, feeds and heals those that come to him daily and was told by Shiva he would live 500 years.


               Siddha is able to know the intention behind the words and actions of everyone that come to him for any reason! His INTEGRITY is the HIGHEST. It is IMPOSSIBLE for anyone to participate with Siddha unless their Intentions are Pure. Currying favor with words, gifts or money with this great Siddha is Impossible and a waste of time.


               Maha Ananda Siddha was born in Dharmapuri district on December 6, 1930. For some time he was engaged in the pleasant smelling turmeric trade.
When he was thirty five, he undertook renovation work in many temples in Tamil Nadu under the inspiration of Lord Siva. Then he started feeding the poor (Annadanam) at Lokuvakulam Bharadhwajeeswarar temple of Kalahasthi in Andhra Pradesh. On the midnight of December 25, 2002, Lord Siva appeared before Mahananda and said, “you are very fortunate in this life; you are a siddha with a boon to live for 500 years; Go to Mahadeva Mount and live in a cave there, worship Me and protect the devotees”. Lord Siva disappeared after that.


               In obedience to the command of God, Mahananda Siddha reached Mahadeva mount. Lord Siva appeared again before Mahananda Siddha and said “you should brush your teeth and take bath only on the first day of Chithirai- April 14.



Shiva said to Maha Ananda Siddha:
  • You should avoid seeking alms from anyone; all the wealth will be heaped here;
  • You should protect all the living creatures in this mountain from disease and suffering;
  • From now on you should stop eating food & drinking water to satisfy your hunger & thirst.
  • “After giving this advice Lord Siva disappeared.
The form on the head of Mahadeva Swami is similar to the serpent with five heads on Lord Siva’s head. Mahananda siddha worships the idol with flowers that spread fragrance and leaves with good smell. He is a Siddha who sleeps by lying on a bed of fire. It is true that most people die without eating for drinking water, yet Mahananda Siddha has demonstrated that it is possible to live without taking food or water since 2003. It is a matter of wonder and fact to learn that this great Siddha lives amongst us on this planet at this time.



Maha Ananda Siddha and Siddha Medicine

            Siddha Medicine is the greatest gift of the siddhas to mankind. Our Mahananda Siddha has learnt about many herbs by the grace of Bogar and he has been curing many persons suffering from many so called incurable diseases.He is an accomplished yogi, with a fund of knowledge and he is excellent at Siddha medicine. By making use of rare herbs, he makes those who have become dumb to speak and they praise him in ever so many words after regaining their speech. Even those who suffer from diseases of karma because of their past actions are cured. If women without children approach Mahananda siddha, the latter by the grace of God and by the power of hisTapas, by giving vilvam (leaf from the vilva tree found in Siva temples), Vibhoodhi and (herbal) medicine cure them of infertility and they beget children.


        Free Medical Service - Once in a month, a medical camp is held in order to enable several persons to avail of the medical service. Many doctors with a humanitarian bent of mind take part in this social service.
For more information about Siddhas, you may read “Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition” from Marshall Govindan or “Siddhas – Masters of the Basics” from Pal Pandian.


           In teaching man to regard his physical and psychic organism as the perfectly functioning vehicle of the ‘Divine Life Spark’ within, the Siddhas of South India demonstrated how medicine may work in unison with metaphysics.


          Medicine provides man with a necessary and adequate instrument towards gaining the most highly valued of experiences: the very essence of reality. The primary dignity of medical knowledge centers in its metaphysical aim to provide a sound physical basis for the realization of Divine Truth, and to help man to attain the status of the Enlightened, even for the sage and the saint, while complying with the actions & demands of family life.



       Thus medicine aids man in bringing to maturity the core germ of Divine Being in his perishable body. Only by caring for his mortal vehicle is man able to arrive at the realization of his highest potentialities.

திருமுறைத்தலங்கள் தொண்டை நாட்டுத் தலம் திருவலம்


 திருமுறைத்தலங்கள் தொண்டை நாட்டுத்    தலம்    திருவலம்


திருவலம்
              மக்கள் வழக்கில் 'திருவலம்' என்று அழைக்கப்படுகின்றது. வேலூருக்குப் பக்கத்தில் உள்ள காட்பாடிக்கு அண்மையில் உள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாகக் காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப்பேருந்துகள் அடிக்கடி செல்லுகின்றன. தனிப்பேருந்தில் செல்வோர் சென்னையிலிருந்து - பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை முத்துக்கடை நிறுத்தத்தை அடைந்து, இடப்புறமாக ஆற்காடு சாலையில் திரும்பாமல், நேரே செல்லும் பெங்களூர், சித்தூர் சாலையில் சென்றால் 'சிப்காட்' தொழிற்சாலைப் பகுதிகளைத் தாண்டி', சிறப்புபெற்ற திருவலம் இரும்புப் பாலத்தைக் (திருவலம் பிரிட்ஜ்) கடந்து இத்தலத்தை அடையலாம். 
                                                                                                                             
   பாலத்தின் மறுமுனையில் ஊர் உள்ளது. ஊருக்குள் நுழையும் போதே கோபுரம் தெரியும்.
               'நிவா' நதி ஓடுகிறது. நதியின் கரையில் சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. இந்நதி ஓடிச்சென்று பாலாற்றில் ஒன்றாகிறது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு 'c, வா' என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'c வா' நதி நாளடைவில் 'நிவா' நதியாயிற்று என்கின்றனர். இன்று 'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சவாமிக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இப்போது கோயிலுக்குள் கௌரி தீர்த்தமும் தீர்த்தக் கிணறும் உள்ளன. நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடுகின்றது.

        இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகின்றது. ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தது. அக்காட்டில் ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் இருந்தது. நாடொறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்று சிறிது சிறிதாகக் கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.

    கோயிலுள் தென்னைமரங்களும் பலாமரங்களும் உள்ளன. தொலைவிலிருந்து பார்க்கும்போது பசுமையான சோலைகளுக்கிடையே கோயில் இருப்பது கண்ணுக்கு அழகான காட்சியாகும். சுற்றுமதில் செம்மையாக உள்ளது.

      பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில் 'வல்லம்' என்றொரு ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது.
இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும், உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும், அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

                  கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
                      இறைவன் - வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்
                     இறைவி - தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை
                     தலமரம் - வில்வம், கோயிலுள் உள்ளது.
                     தீர்த்தம் - கௌரி தீர்த்தம், கோயிலுள் உள்ளது.
சம்பந்தர் பாடல் பெற்றது.

               கோயிலுக்கு முன்புள்ள மண்டப முகப்புடன் நான்கு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. உள் நுழைந்ததும் இடப்பால் பிற்காலப் பிரதிஷ்டையான (திருவலம் மௌன சுவாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த) அம்பிகேஸ்வரர் உடனாகிய ராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது காணத்தக்கது. வலப்பால் நீராழி மண்டபத்துடன் கூடிய கௌரி தீர்த்தம் உள்ளது.

        உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல்மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியுள்ள சிவலிங்கத் திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீ கண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.

         இதனை அடுத்து மிகச் சிறியதான - பார்ப்பதற்கு அழகான 'சஹஸ்ரலிங்கம்' உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. அடுத்துள்ளது வாகன மண்டபம்.
இதற்கு எதிரில் "ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாகவுள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியது. இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது. இதுவன்றிப் பிற்காலத்தில் வைத்துப் பயிராக்கப்பட்டுள்ள பலா மரங்களும் கோயிலுள் உள்ளன.


           அடுத்து வலமாக வரும்போது அம்பாள் சந்நிதி - கிழக்கு நோக்கி முன் மண்டபத்துடன் தனிக் கோயிலாக உள்ளது. கருவறை, அகழி அமைப்புடையது. வலம் வரலாம். கோஷ்டமூர்ததமாக விநாயகர் அன்னபூரணி, அபயவரதத்துடன் அமர்ந்துள்ள அம்பாள், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. சந்நிதி எதிரில் பிராகாரத்தில் தலமரமான வில்வம் உள்ளது.

       வலப்பால் சுந்தரேஸ்வரர் சந்நிதி - கிழக்கு நோக்கியதாகத் தனிக் கோயிலாக உள்ளது. மீனாட்சியம்மை தெற்குமுக தரிசனம். உள்ளே வலம் வரலாம். கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரமன், துர்க்கை முதலிய - மிகச் சிறிய திருவுருவங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் உள்ளார். சந்நிதியின் எதிரில் தீர்த்தக் கிணறு உள்ளது.

         பிராகாரத்தில் யாகசாலையும் பைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. செப்புக் கவசமிட்ட கொடிமரம், இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடி மரத்தின் முன்பு உள்ளது.

           கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி - சுவாமிக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கியுள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் வெளியில் உள்ளதைப்போலவே கிழக்கு நோக்கியுள்ளது. இவகைளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தி கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது. முன்னுள்ள நந்தியைப் போலவே பெரியதாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

      நந்தி, கிழக்கு நோக்கி 4.A.e. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. அது தற்போது 'காஞ்சனகிரி' என்று வழங்குகின்றது. இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் தீர்த்தம் இக்கோயிலுக்கு மிகப்பழங்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு கொண்டு
வருவதைக் 'கஞ்சன்' தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, நந்தியெம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அடித்து அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின், லலாடம் வீழ்ந்த இடம் தற்போது 'லாலாபேட்டை'
என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் 'மணியம்பட்டு" என்றும், மார்பு, வீழ்ந்த இடம் "குகையநல்லூர்" என்றும் வழங்கப்படுகிறது.

       இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு 3 A.e. தொலைவில் உள்ளன. இந்நிகழ்ச்சியையட்டியே நந்தி, காவலுக்காகக் கிழக்கு நோக்கியுள்ளார். காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம்.

        சிப்காட் தொழிற்பகுதி வழியாகச் சாலையில் செல்லும் போது இம்மலையைப் பார்க்கலாம். (லாலாப்பேட்டைக்குப் பக்கத்தில் இம்மலை உள்ளது. லாலாபேட்டைக்கு ஆற்காட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.)
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே சிவலிங்கத் திருமேனி தரிசனம். வாயிலைக் கடந்ததும், இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் 'பிராமி' உருவச்சிலையுள்ளது. தெற்கு நோக்கிய பக்கவாயில் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது.

           கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் உள்ளனர், எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, அறுபத்துமூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

            சங்கரநாராயணர் திருவுருவம் வலப்பால் உள்ளது. இடப்பால் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர்' சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின், இப் பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது. மூலவர் வாயிலில் உள்ள இரு துவார பாலகர்கள் திரு மேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடன பாவ முத்திரையுடன் விளங்குகின்றது.

              மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு, கிழக்கு நோக்கியது. சதுர பீட ஆவுடையார். சந்நிதிக்கு வெளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய நந்திக்குப் பக்கத்தில் நடராச சபையும், அடுத்து நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நடராச மூர்த்தம் உருண்டை வடிவமான பிரபையுடன் அழகாகவுள்ளது.