சனி, 24 டிசம்பர், 2011

nilamum poluthum tholkappiyam

உலக மக்கள் எல்லாம் உயர்நிலை பெறவேண்டும் .நாகரிகம் ,பண்பாடு ,கலாச்சாரம் போன்ற மனித பண்பாடு செழிக்கவும் ,தனி மனிதனின் பண்பு நலன்கள் வளரவும் இலக்கியங்கள் துணை புரிகின்றன .குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் துணை புரிகின்றன .குறிப்பாக தமிழ் இலக்கியங்களில் முழுமை பெற்ற இலக்கியமாக திகழ்வது தொல்காப்பியமும் திருக்குறளும் தான்.மண்ணைச் சார்ந்துதான் பண்பாடு வளர்கிறது    

காலம் தான் மனிதனின் ஆளுமையை பண்படவைக்கிறது .நிலமும் காலமும் ஒரு சமுதாயத்தையும் தனிமனிதனையும் செதுக்கும் சிற்பியாய் திகழ்கிறது 
நிலமும் ,காலமும் சக்தி வாய்ந்த வடிவங்கள் என்பது மறக்கமுடியாத உண்மை தொல்காப்பியரின் நோக்கில் நிலத்த்தையும் பொழுதையும் எவ்வாறு உணர்த்துகிறார் என்பதை இக்கட்டுரையால் தக்க சான்றுடன் காண்போம் .

   நிலமும் பொழுதும் :
                                           நிலத்தை ஐந்திணையாக பிரித்தனர். திணை என்பது ஒழுக்கத்தையும் ,இடத்தையும் உணர்த்த கூடியது .முதல் ,கரு ,உரி என முப்பொருளும் பிரிவை உடையனவை .ஒவ்வொரு திணைக்கும் முதல் ,கரு ,உரி என்பன தனித்தனியாய் வரையறுக்கப்பட்டன .முதல் என்பது நிலனும் பொழுதும் இதனை தொல்காப்பியர் ,

                         " முதல் எனப்படுவது நிலமும் பொழுதும் இரண்டின்
                           இயல்பென மொழிப இயல்புண்ர்ந தோரே ''

என்பர் .உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே நாம் உணர்ந்ததுதான் .இவை யாரால் எப்போது தோற்றி வைக்கப்பட்டது என்று யாராலும் வரையறை செய்து கூறமுடியது. இடமும் காலமும் என்றும் உள்ளவனாக இருக்கிறது .ஆகவே என்றும் உள்ளவற்றை முதற்பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் மிகப்பெரிய இரகசியம் நம் அறிவுக்கு புலனாகும் .

நிலம் :
             நிலம் நால்வகையாக பிரிக்கப்பட்டது .காடுறைஉலகம்,மைவரைஉலகம் ,தீம்புனல் உலகம் ,பெருமணல்உலகம் ,என்பவன முறையே முல்லை ,குறிஞ்சி ,மருதம் ,நெய்தல் என சொல்லப்பட்டன.உலகம் இந்நால்வகை இயற்கைப் பிரிவினுள் அடங்கிவிடு கிறது . பாலையின் தோற்றம் இயற்க்கை அல்ல .சோலை நிலம் சோலையாவதும் என்றும் நிகழ்ககூடியவை பாலை நிலப்பகுப்பில்  சேர்க்கவில்லை என்பது அறிஞர் களின் கருத்து .

இப்பிரிவு தமிழ் நாட்டுக்கும் மட்டும் அல்ல . உலகத்திற்கு உரியது என்பதனை உணர்த்தவே காடுறை உலகம் ,மலைஉலகம் என்று குறிப்பிட்டுள்ளார் .

              " மாயோன் மேய காடுறை உலகம்
               சேயோன் மேய மைவரை உலகம்
              வேந்தன் மேய தீம்புனல் உலகம்
               வருணன் மேய பெருமணல் உலகம்
              முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
              சொல்லிய முறையால் சொல்லவும் படுமே "


ஒரு நிலப் பகுதியை குறிப்பிடுங்கால் நிலப் பகுதியால் கிடைக்கும் விளைபொருள்களை செய்பொருள்களை எடுத்து சொல்வது தான்இயல்பு .ஆனால்தொல்காப்பியர் அந்நில மக்களால் வழிபடும் கடவுளினை சிறப்பாக எடுத்து மொழிகிறார் .

      மக்களுக்கு கடவுள் பற்றும் கடவுள் உணர்வும் இன்றியமையாதன என்பதனை வலியுறுத்தவே ஆசிரியர் இவ்வாறு கூறினார் .பெயர் பலவாயனும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழருக்கு உண்டு ,மாயோன்,சேயோன் ,வேந்தன் ,வருணன் முதலியனவும் ஒரு கடவுளை சுட்டுவதுதான் .

       " மாயோன் என்றால் அழியாதவன் ;சேயோன் என்றால் சேய்மையில் உள்ளவன் ;அறிவுக்கு எட்டாதவன் ;வேந்தன் என்றால் தலைவன் ,விரும்புதற்கு உரியவன் ;;வருணன் என்றால் நிறங்களுக்கு உரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும் " என்பர் பேராசிரியர் சி. இலக்குவனார் .

தொகுப்புரை:
                      இக்கட்டுரை வாயிலாக மேற்க்கண்ட கருத்துக்களை நோக்கும்கால்  மாயோன்;சேயோன்;வேந்தன்;வருணன் என நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கிறது என்பது திண்ணம் .கடவுள் ஒருவரே , அவர் எங்கும் நிறைத்தவர் ;அன்பின் வடிவமாக இருப்பவர் ;எல்லா உயிர் களையும் காக்கும் பரம்பொருள் ;என்பதை  உணரமுடிகிறது .