மகா அவதார் பாபாஜி வரலாறு ( Mahavatar Babaji Histroy )
"ஓம் கிரியா பாபாஜி நமஓம் "
இயற்பெயர் : நாகராஜ்
அகத்திய முனிவர் மற்றும் ஆஞ்சநேயர் போல் ,பாபாஜியும் ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக வாழ்கிறார். உலகமெங்கும் சென்று அருள் மழை பொழிந்து கொண்டு இருப்பவர்.பல ஞானிகளை உருவாக்கியவர்.
சித்தர் போகரின் அருமந்த சீடர் ! அஷ்டமா சித்திகளை பெற்றவர். பாபாஜி, போகரிடம் சிஷ்யராக, பல யோக சாதனைகளை, தியான கிரியைகளை பழகினார். பின் முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார்.
பொதிகை மலையில் அகத்தியரை நினைத்து கடும் தவம் இயற்றினார். அவர் காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த போதிலும், மனம் தளராமல் அகத்தியரின் பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.
பின்பு அகத்தியர் காட்சி தந்து , பாபாஜிக்கு கிரியா, குண்டலினி, பிராணயாம தீட்சையை அளித்து , பாபாவை பத்ரிநாத்துக்கு செல்லுமாறு பணித்தார். உலகம் அதுவரை அறிந்திராத ஒரு மாபெரும் சித்தராக பாபாஜி உருவாவதற்கு அன்று அகத்தியர்தான் அடித்தளம் அமைத்தார்.
இமய மலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில், பாபாஜி கடும்தவம் செய்து "சொரூப சமாதி" அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம் அவரை சூழ்ந்து அமைந்தது. அவரது உடல் முதுமை, பிணி ஆகியவற்றில் இருந்து கடவுளின் அருளால் அறவே விடுபட்டது.
ஜீவாத்மாவின் கருவியாக, பாபாஜி ஒரு சித்தராக, அரூபியாக மாறினார். அன்றில் இருந்து மக்களுக்கு இல்லறத்தில் இருந்து கொண்டே கிரியா யோகத்தை கற்று யோகிகளாக வாழ, வழிமுறை செய்தார்.
கிரியா யோகத்தின் ஒளி விளக்காக மகா அவதார் பாபாஜி திகழ்கிறார்.
பாபாஜி, மீண்டும் கிரியா யோகத்தை புத்துணர்ச்சி பெறசெய்து , பல தவ புருஷர்களான ஆதி சங்கரர், கபீர் தாஸ், லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர், பரமஹம்ச யோகாநந்தர் மூலமாக இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும் கிரியா யோகத்தைக் கற்று முக்தி நிலையை அடைய க்ரியா யோகத்தை கற்று தந்தார்.
க்ரியா யோகம் : க்ரியா யோக பயிற்சியை தகுந்த குருவின் மூலமாக தீவிரமாக செய்தால், அவர் தனது பிறப்பு, இறப்பு கர்ம வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக நிலையை சீக்கிரமாக அடைய முடியும்.
அரை நிமிடம் செய்யும் ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு - இறப்பு ஜென்மத்திற்கு சமமான கர்மவினைகளை குறைக்கும். எட்டரை மணி நேர கிரியா பயிற்சி, ஆயிரம் வருட பிறப்பு - இறப்பு ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்
பாபாஜி கூறுகிறார் :
" நீ ஒரு அடி தூரம் என்னை நோக்கி வந்தால், நான் பத்தடி எடுத்து வைத்து உன்னிடம் வருகிறேன்."
பாபாஜி கூறுகிறார் :
" நீ ஒரு அடி தூரம் என்னை நோக்கி வந்தால், நான் பத்தடி எடுத்து வைத்து உன்னிடம் வருகிறேன்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக